கராத்தே தரப்படுத்தல் மற்றும் மாணவர்களுக்கான குமித்தா, காத்தா போட்டி சிறப்பாக நிறைவு.
எம்.யூ.எம்.சனூன்
கராத்தே பயிற்றுவிப்பாளர் இம்ரான் வஹாப் தலைமையில் “கராத்தே தரப்படுத்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான குமித்தா, காத்தா போட்டி” அண்மையில் (04) சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக மதீனா தேசிய பாடசாலை அதிபர் எஸ்.எம். ஹைதர் அலி, பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், குளியாப்பிடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம் சத்தார், குளியாப்பிடிய பிரதேச சபை உபதவிசாளர் இர்பான் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
அயல் பிரதேசங்களைச் சேர்ந்த பத்து பாடசாலைகளின் மாணவ மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தரப்படுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு மாணவர்களின் உடல் உறுதி, ஒழுக்கம், மற்றும் விளையாட்டு மனப்பாங்கை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments