சவூதி - பாகிஸ்தான் தூதுவர்கள் சந்திப்பு..!
(எஸ். சினீஸ் கான்)
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களை, இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஃபஹீம் உல் அசிஸ் அவர்கள் இன்று (8) சவூதி அரேபிய தூதரகத்தில் சந்தித்தார்.
இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த உயர்மட்ட இராஜதந்திரச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
No comments