கற்பிட்டி கீரிமுந்தல் தீவில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களின் இருப்பிடத்தை காவு கொள்ளும் கடல் அலைகள்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி டச்பே கிராம உத்தியோகத்தர் பிரிவில் உச்சமுனை எனும் தீவில் வெள்ளைக்கார குடா எனும் இடத்தில் ஒரு பக்கம் பெருங்கடலாலும் மறுபக்கம் சிறுகடலாலும் சூழப்பட்டுள்ள ஒரு தொன்மை வாய்ந்த அழகான தீவாக கீரிமுந்தல் காணப்படுகின்றது.
கி.மு 700 ம் நூற்றாண்டிலே மன்னார் மாதோட்டம், குதிரைமலை , துறைமுக வர்த்தக பெருந்தோட்ட வரலாற்றோடு மக்களின் வாழ்வியல் ஆரம்பமாகிறது. கற்பிட்டியில் இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீரிமுந்தல் தீவு பகுதி மின்சார வசதிகளுடன் உப தபால் நிலையத்தையும் கொண்டுள்ளது
எனினும் அண்மைக் காலமாக பெருங்கடல் அலைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக பல ஏக்கர் குடியிருப்பு நிலம் கடலுக்கு இறையாகிள்ளதாகவும் இதன் காரணமாக மீனவ மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இக்கிராம மீனவர்கள். இக் கீரிமுந்தல் தீவை பாதுகாக்கும் நோக்கில் கடல் அலைகளின் ஆதிக்கத்துக்கு தடை அமைக்கும் வண்ணம் கற்பாறைகளை கடல் ஓரமாக அமைத்து தருமாறு அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரிடம் கோரிக்கைகள் விடுத்துள்ள போதும் இதுவரை அதற்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர் .
இது விடயமாக அதி மேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு இவ் விடயத்தை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அருட்தந்தை ஆகியோருடன் இணைந்து ஊர்மக்கள் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments