பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் லீடர் அஸ்ரபில் ஆசிரியர் தின விழா – 2025 !
மாளிகைக்காடு செய்தியாளர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் 2025 அக்டோபர் 8 ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்வி துறையில் சிறந்த பங்களிப்பு செய்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் யூ.எல்.என். ஹுதாவின் நெறிப்படுத்தலில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் தலைவரும், அதிபருமான எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப் கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான அஸ்மா ஏ மலிக் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.எம். றபீக் கலந்து கொண்டார்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் பாராட்டி ஆசிரியர்கள் சமூக வளர்ச்சியின் தூண்களாக இருப்பதாகவும், அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க பெரும் பணி ஆற்றி வருவதாகவும் அதிதிகள் இங்கு உரையாற்றினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன இங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர் எப்.எம்.ஆர்.ஹாதிம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் உறுப்பினர்களான எப்.எம். ரஹுபி, எம். ராபீன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர்களான ஏ.எல்.எம். பாஹீம், எஸ்.எல். ஷாமிலா உட்பட ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments