கற்பிட்டி நகர எல்லையின் ஏ7 வீதியில் 643 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை (07) கற்பிட்டி நகர எல்லைக்குள், A7 பாதையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் அறுநூற்று நாற்பத்து மூன்று (643) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்களையும், ஒரு கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த செவ்வாய்க்கிழமை (07 ) நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கறபிட்டி நகர எல்லைக்குள் உள்ள A7 பாதையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான கெப் வண்டி சோதனை செய்யப்பட்டதாகவும். இதன் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று நாற்பத்து மூன்று (643) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கெப் வண்டியும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 41 வயதுடைய தலவில் மற்றும் பாலாவி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், கெப் வண்டி மற்றும் பீடி இலைகளை என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments