Breaking News

கற்பிட்டி பெரியகுடியிருப்பு பிரிவிற்கான பொது பாதுகாப்பு குழுக் கூட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பெரியகுடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான பொது பாதுகாப்புக் குழுக்கூட்டம் அண்மையில் கிராம உத்தியோகத்தர் எம்.றியால் தலைமையில் வாழைத்தோட்டம் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


இதில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசாநாயக்க கலந்து கொண்டதுடன் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கு இடையிலான தொடர்பு மிகவும் தூரமாக்கபட்டதன் விளைவு எமது கற்பிட்டி பிரதேசத்தில் சட்ட விரோத கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் மேலும் போதைப் பாவனையும் விற்பனையும் கணிசமாக அதிகரித்ததுள்ளது. இது விடயத்தில் பொது மக்கள் விழிப்புணர்வோடு செயற்படுமாறும் இச்சம்பவங்கள் பற்றிய தகவல்களை சரியான நேரத்திற்கு பொலிஸாருக்கு வழங்கி ஒத்துழைப்பதன் மூலம் போதையற்ற சிறந்த நகரமாக கற்பிட்டியை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.


அத்தோடு ஒவ்வொரு மாதமும் கற்பிட்டி பெரியகுடியிருப்பு க்கான பாதுகாப்பு பொதுக் குழு கூட்டம் மாதத்தின் முதலாவது சனிக்கிழமை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தவறாது கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்


இக் கூட்டத்தில் பெரியகுடியிருப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சாமிலா, கற்பிட்டி பிரதேச செயலகத்தின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஏ.ஆர் முனாஸ், கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு குழு பொறுப்பதிகாரி பஸ்நாயக்க மற்றும் பொலிஸ் அதிகாரி வண்ணிநாயக்க ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.








No comments