ரம்புக்கன பிரதேசத்தில் சீரற்ற காலநிலையால் பல பகுதிகள் பாதிப்பு
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன பிரதேச செயலாளர் பிரின் பல பிரதேசங்கள் அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வல்கம, உடுகம, பொல்அத்தபிடிய, ஈரியகொல்ல மற்றும் வலல்கொட ஆகிய பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ் அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரணப்பணியை விரைவில் பெற்றுக் கொடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதாக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பெந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சருமான கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்பணியினை முன்னெடுக்கும் வகையில் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவினர், வீதி அபிவிருத்தி சபை, இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதேச அரச உத்தியோகத்தர்களும் குறித்த இடங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம். ஆர். சியாஉர் ரஹ்மான் பறகஹதெனிய
No comments