தொழிற்சங்க தலைவர்களுக்கு பிரதமர் பகற் போசனம் - அதிபர் ஆசிரிய தொழிற்சங்க போராட்டம் தற்காலிக வெற்றி
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தில் முன்னணியில் திகழ்ந்து போராடிய கதாநாயகர்களாகிய யோசப் ஸ்டாலின் மஹிந்த சமரசிங்க மற்றும் சமந்தா ஹந்தபான்கொட உட்பட தொழிற்சங்க சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் பகற் போசன விருந்தளித்தார்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின் ஒரு அங்கமாக இன்று பிரதமர் நிதி அமைச்சர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஆசிரிய தொழிற்சங்கங்களால் கேட்கப்பட்ட தற்காலிக தீர்வுக்கு எட்டிய பின் பிரதமர் இவர்களுக்கு இந்த சுமுக விருந்துபசாரத்தை வழங்கியுள்ளார்.
No comments