தோல்விக்கு விராட்கோலி மட்டுமா காரணம்?இரசிகர்கள் மீது அசாருதீன் எரிச்சல்
இந்திய அணி பாகிஸ்தான் நியூசிலாந்து இடம் தோல்வி அடைந்தமை குறித்து இந்திய கிரிக்கட் இரசிகர்கள் அணித்தலைவர் விராட் கோஹ்லியை மோசமாக விமர்சித்து வருகின்றனர் இது ஒரு தவறான அணுகுமுறை என இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொகமட் அசாருதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயத்தில் அணித் தலைவரை மட்டும் குற்றச்சாட்டுவதில் எந்த நியாயமும் இல்லை தோல்விக்கு தேர்வுக்குழு மட்டுமன்றி போட்டியில் சொதப்பிய துடுப்பாட்ட பந்துவீச்சாளர்கள் அனைவரும் வகை சொல்ல வேண்டும்.
இரண்டு போட்டிகளிலும் அணியின் துடுப்பாட்ட பந்துவீச்சு சிறப்பாக இடம் பெறவில்லை எனவும் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
No comments