Breaking News

சம்மாந்துறை- நெய்னாகாடு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை கல்வி வலய நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அடிப்படை வசதிகளற்ற மாணவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிரின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில்  புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தார். இதில் பாடசாலை அதிபர் ஏ.பி.ஹிபத்துல்லா, பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது பாடசாலையில் யானை தொல்லையினை கட்டுப்படுத்தும் வகையில் வேலிகளுக்கு வெளிச்சத்தை  வழங்கக்கூடிய சூரிய சக்தி மூல மின்கலமும் பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








No comments