Breaking News

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு கருதி பாராளுமன்ற உறுப்பினர்களின் உடல் பரிசோதனை

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் நுழையும் முன் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.


இவ்விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் விளக்கம் கேட்டதற்கு இணங்க சபாநாயகரின் தீர்மானத்திற்கு இணங்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


எனினும் தொழில்நுட்ப ரீதியாக உலகம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் பாராளுமன்றங்களில் உடல் பரிசோதனை இடம்பெறுவதில்லை இலத்திரனியல் உபகரணங்களின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


அத்துடன் அவ்வாறானதொரு பாதுகாப்பு இல்லாத நிலைமை பாராளுமன்றத்தில் இருக்குமாக இருந்தால் அதனை பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் தெரியப்படுத்துமாறும் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.




No comments