ஜனவரி 1 முதல் மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகள் ஓட முடியாது
வாடகைக்கு அமர்த்தப்படும் சகல முச்சக்கர வண்டிகளிலும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் மீற்றர் பொருத்தப்படுவது சட்டமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் 2018ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலாக்கப்பட்டபோதிலும் அது சாத்தியமாகவில்லை.
எனவே எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜுன் 15 ஆம் திகதி காலப் பகுதிக்குள் வாடகைமுச்சக்கர வண்டிகள் மீற்றர்களைப் பொறுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக பொலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
No comments