Breaking News

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரிக்கை!

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும்ப‌டி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ர் ச‌ப்வான் முஹ‌ம்ம‌த் ச‌ல்மான் அர‌சாங்க‌ அதிப‌ரிட‌ம் அவ‌ச‌ர‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது ப‌ற்றி அவ‌ர் புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு எழுதியுள்ள‌ க‌டித‌த்தில் குறிப்பிட்டிருப்ப‌தாவ‌து, 


  புத்தளம் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பல பிரதேசங்களில் வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 அரசின் பங்காளியான ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.

  அப்பாவி மக்கள் மற்றும் சிறுவர்களின் குறைகளை மனதில் கொண்டு புத்தளம் நகரம் உட்பட இதுவரையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள சகல பிரதேசங்களுக்கும் நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



எம்.எஸ்.எம்  சப்வான்

கொள்கை பரப்பு செயலாளர், 

புத்தளம் மாவட்ட அமைப்பாளர்,

ஐக்கிய காங்கிரஸ் கட்சி.

 2021-11-09





No comments