Breaking News

வரவு செலவுத் திட்டத்தில் முதல் முறையாக 7.51% கல்விக்கு ஒதுக்கீடு

ஆசிரியர் சம்பள நிலுவை வழங்க 30000 ஆயிரம் மில்லியன் நிதி அமைச்சர் தகவல்


வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கல்விக்கு 7.51வீதத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்க 30000 மில்லியன் ரூபாய்களையும் ஒதுக்கியுள்ளதாக  நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இன்று பிரதமர் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினருடன் அதிபர்  ஆசிரியர்  தொழிற்சங்களுடன் நடத்திய அதிபர் ஆசிரியர் சம்பள நிலுவை பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.


இக்கலந்துரையாடலின் போது இசசம்பள நிலுவையின் தொழிற்சங்கங்கள் விடாப்பிடியாக கேட்டுப் போராடிய முழுத் தொகையையும் வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




No comments