Breaking News

புத்தளம் நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் தலைமையில் (15) ஆம் திகதியன்று  பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் மாதாந்த பொதுச் சபை அமர்வு இடம்பெற்றது.


நகரபிதா எதிர்வரும் 2022ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.


நகரசபை உறுப்பினர்கள் அனைவரினதும் ஆதரவுடன் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


நெருக்கடியான தற்போதைய நிலைமையிலும் வரியிறுப்பாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும். 


1.மாட்டிறைச்சிக்கான நிர்ணய விலை ஒரு கிலோ 1000/- ரூபாய் கலவன் ஈரல் 1200/- ரூபாய் 


2.தொழில் தவிர்ந்த சொந்தத் தேவைகளுக்காக வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கான வாகனத் தரிப்பிட கட்டணமாக ரூபா 1000/- தீர்மானிக்கப்பட்டுள்ளது.


3. நகரசபையின்      மாவட்ட விளையாட்டு அரங்கத் தொகுதியின் உள்ளக விளையாட்டரங்கு கால்பந்து மைதானம் மற்றும் நீச்சல் தடாகங்கள் ஆகியவற்றின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 


4.தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தடகளப் பயிற்சிக்காக மைதானக் கட்டணம் இலவசம். 


5.நகர சபையின் நவீன கேட்போர் கூடத்திற்கான ஒரு நாள் வாடகை 80.000ஆயிரம் ரூபாயிலிருந்து 40.000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


6. நகரசபைக்குச் சொந்தமான கடைகளை பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ஒரு சதுர அடிக்கு 2000/- ரூபாவிலிருந்து 1000/- ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.


7. வியாபார அனுமதிப்பத்திரத்திற்கான  கட்டணத்தோடு அறவிடப்பட்ட சகல சேவைக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.


8. நகரசபையில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிட கட்டணம் நாளொன்றுக்கு 20/- ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.


புத்தளம் நகர பிதாவாக எம்.எஸ்.எம். ரபீக் பொறுப்பேற்ற பின் இடம்பெற்ற முதலாவது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 







No comments