Breaking News

சின்னா பின்னமாக்கப்பட்ட தாய்நாட்டை சுபீட்ச பூமியாக மாற்றி அமைப்போம் - மேசை மீது ஏறி நின்று சஜித் நாட்டு மக்களுக்கு சூளுரை

அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வானுயர விலைகள் அதிகரிக்கப்பட்டு அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது சிறு குழந்தையின் பால்மா முதல் அடுப்பு எரியும் மண் எண்ணெய்யை பெறுவதற்கும் இன்று கியூ வரிசைகளில் நிற்கவேண்டிய அவல நிலை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.


பெட்றோல் டீசல் மசகு எண்ணெய் பெறுவதற்கு டொலர் இல்லை என்கிறார்கள் ஆனால் இதன் பின் பாரிய சந்தேகங்கள் நிலவுகின்றன.


நாட்டு மக்களே  இதன் பின்னரும் பொறுமை காக்க முடியாது எங்கள் அணியில் ஒன்று திரளுங்கள் ஊழல் மோசடி இன மத பேதம் அற்ற சுபிட்சமான  நாட்டை உருவாக்குவோம்


இந்த சீர்குலைக்கப்பட்ட நாட்டை உங்களுக்கு மீட்டுத் தருவோம் என உறுதி அளிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலி முகத்திடலில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் திரண்ட பெரும் எண்ணிக்கையான மக்கள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.








No comments