ஈஸ்டர் தின தாக்குதல் மைத்ரி உட்பட 12 பேருக்கு எதிரான விசாரணை ஆரம்பம்
ஈஸ்டர் தினத் தாக்குதலை தவிர்க்காமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 12 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க இவ்வழக்கு விசாரணை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இத்தாக்குதல் நிகழ்வை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து 12 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வழக்கு விசாரணையை மேற்கொள்ள 7 நீதியரசர்கள் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இக்குழுவில் இருந்து இரண்டு நீதியரசர்கள் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
No comments