சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமான வரவுசெலவுத்திட்டம் - பிரதமர் புகழாரம்
நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய முடிந்த அனைத்து வளங்களையும் திரட்டி இதை சிறப்பாக திட்டமிட்ட வரவு செலவு திட்டத்தை முன்வைத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கோவிட் நெருக்கடி எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு நெருக்கடிகள் தலைதூக்கி இருந்த நிலைமையில் நாட்டின் எதிர்கால இலக்குகளை நோக்கிய வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது சவாலான காரியமாகும்.
எவ்வாறு எனினும் அடுத்து வரும் கட்டங்களில் உள்ள வளங்களை திரட்டி நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்ட வரவு செலவுத் திட்டமாக இதனை நான் காண்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
No comments