பிச்சைக்காரர்களிடம் பிச்சை கேட்கும் நிலையில் அரசாங்கம் - வசந்த சமரசிங்க தெரிவிப்பு!
அடுத்த வருடம் 35 வீத வரி அதிகரிப்பு
நிதி அமைச்சர் முழு வரிச் சுமையையும் வரவு செலவுத்திட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை
கோவிட் நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் விலை அதிகரிப்புகளுக்கு மத்தியில் திண்டாடும் மக்களிடமே வரிகளை அறவிடப்படுகிறது.
வியாபாரிகள் பதுக்குவார்கள் எனக் காரணம் காட்டி சில வரி அறவீடுகளை பகிரங்கப்படுத்த முடியாது என நிதியமைச்சர் குறிப்பிடுகிறார் அவ்வாறாயின் இதனை விட அதிக வரிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் மக்கள் மீது சுமத்தப்பட்ட இருக்கிறது என்பதே அர்த்தமாகும்.
கோவிட் நெருக்கடியாலும் பொருட்கள் விலையேற்றத்தாலும் துன்பத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு மேலும் வரிச் சுமைகளை சுமத்தும் முயற்சியாகவே இது காணப்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
No comments