JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சிராம்பையடியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் சிராம்பையடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டித்வா புயலால் முழுமையாக பாதிக்கப்பட்ட  வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சனிக்கிழமை (18)  நடைபெற்றது.


இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இஷார பீரிஸ், கிராம உத்தியோகத்தர் மற்றும் புயலால் முழுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.


டித்வா புயல் காரணமாக   புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளுக்கான முதல் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு புத்தளம் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் கடந்த வாரம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال