JobVibe.lk - Sri Lanka Job Portal

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் அன்பு தாயார் உம்மு லத்தீபா ஸக்காப் மௌலானா காலமானார்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை மாநகர சபையில் கடமைபுரிபவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஸ்லம் மௌலானாவின் அன்புத் தாயார் உம்மு லத்தீபா ஸக்காப் மௌலானா காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் வானொலிக் கலைஞருமான மர்ஹூம் ஸக்காப் இஸட் மௌலானாவின் அன்பு மனைவியாவார்.


சித்தி மும்தாஜ், இனாம் மௌலானா, றிஸ்வான் மௌலானா, அஸ்வான் மௌலானா, ஜஹாங்கீர் (சௌபான்) மௌலானா, அஸ்லம் மௌலானா, முஹாஜிர் மௌலானா, றமீஸ் மௌலானா ஆகிய பிள்ளைகளின் அன்புத் தாயாரான இவரது ஜனாஸா, சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி ஜின்னா லேனில் அமைந்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானா அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


அவரது ஜனாஸா இன்று (27) திங்கட்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال