JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி குடா பகுதியில் புதருக்குள் 42 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,300 கிலோ விட பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், சனிக்கிழமை (18) கற்பிட்டி கண்டக்குழி குடாப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,300 கிலோவை விட அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நடத்திய இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கண்டக்குழி குடா பகுதியில் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பத்திரண்டு (42) சந்தேகத்திற்கிடமான பைகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று இரண்டு (1,302) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال