JobVibe.lk - Sri Lanka Job Portal

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் 10 அங்கத்தவர்கள் ஊடகப் பயிற்சி நெறிக்காக துருக்கி பயணம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) அங்கத்தவர்களுக்காக,  இலங்கைக்கான துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடகப் பயிற்சி நெறியில் பங்குபற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்ட 10 அங்கத்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை (19) துருக்கியின் அங்காரா நகர் நோக்கிப் பயணமாகினர்.


இப் பயிற்சி நெறிக்கான வேண்டுகோளை அமைப்பின் ஸ்தாபக போஷகர் என்.எம்.அமீன் விடுத்திருந்ததுடன், இப் பயிற்சிநெறியை சாத்தியமாக்குவதற்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் எம்.பி.எம்.பைறூஸ் முன்னெடுத்திருந்தார். 


இதற்கமைய, பங்குபற்றுனர்களின் தெரிவில் வெளிப்படைத்தன்மையை பேணும் பொருட்டு, 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி இந்தப் பயிற்சி நெறிக்காக அங்கத்தவர்களிடையே பகிரங்கமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கமைய 15 அங்கத்தவர்கள் உரிய காலப்பகுதியில் விண்ணப்பித்திருந்தனர். 


தூதரகத்தின் வரையறைகளுக்கு அமைவாக, விண்ணப்பித்த 15 பேரிலிருந்து தகுதியான 9 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன், இக்குழுவை வழிநடத்திச் செல்வதற்காக அமைப்பின் உப தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சிஹார் அனீஸ் தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال