நிர்மல மாதா பாடசாலையின் அதிபர் பிரச்சினைக்கு தீர்வு – தாஹிர் மரைக்கார் எம். பியின் துரித நடவடிக்கை
கல்பிட்டி கல்வி வலயத்திற்குட்பட்ட நிர்மல மாதா பாடசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த நிரந்தர அதிபர் இல்லாத குறைபாடு தொடர்பாக, அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி, கல்பிட்டி கல்வி காரியாலயத்தின் முன் தங்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த விடயம் தொடர்பாக தகவல் அறிந்ததும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரைக்கார் MP அவர்கள் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, கோட்ட கல்வி பணிப்பாளர் ஜவாத் அவர்கள்,
➡️ நிரந்தர அதிபர் நியமிக்கப்படும் வரை ஒரு தற்காலிக அதிபரை உடனடியாக நியமிப்பதாகவும்,
➡️ விரைவில் முழுநேர நிரந்தர அதிபரை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இந்த துரித தலையீட்டுக்கும், மாணவர்களின் கல்வி நலனை முன்னிலைப்படுத்திய செயற்பாட்டிற்கும், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், கௌரவ தாஹிர் மரைக்கார் எம். பிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.




No comments