Breaking News

புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத், நூலக தகவல் விஞ்ஞான துறையின் விசேட பட்டத்தை பெற்றுள்ளார்.

 எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத், நூலக தகவல்  விஞ்ஞான துறையின் விசேட  பட்டத்தை புத்தாண்டு தினத்தன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெற்றுக்கொண்டார்.


இவர் 2011, 2012ம் ஆண்டு புது டில்லியில் நூலக  முகாமைத்துவம் தொடர்பாக பயிற்சியையும் , 2014 ம் ஆண்டு பட்டய நூலகர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.


இலங்கை நூலகர் சங்கத்தில் (யாழ் மத்திய நிலையம்) நூலக தகவல் விஞ்ஞான வருகை தரு விரிவுரையாளராக கடமையாற்றி வருவதுடன், வட மேல் மாகாணத்தில் உள்ள நூலகர்களில் தரம் ஒன்றை சேர்ந்த நூலகராக காணப்படுவதோடு, நூலக துறையில்  SUPRA தரத்திற்குரிய சகல தகைமைகளையும் இவர்  கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





No comments