ஜனாதிபதி மதுரோவை கடத்தியதற்காக ட்ரம்ப்பை குற்றம் சுமத்தலாமா ?
வெனிசுவேலா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அந்த நாட்டு அதிபரை கடத்தியதனால் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் மீது அனைவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இது தவறானது.
ஏனெனில் அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்பு இதுபோன்ற எந்தவித அத்துமீறல்களையும் அமெரிக்கா மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் ஜனாதிபதி ட்ரம்ப் மீது குற்றம் சுமத்துவது நியாயமாகும்.
ஆனால் அமெரிக்க வரலாறு முழுவதும் இரத்தக்கறை படிந்த இவ்வாறான குற்றச்ச செயல்கள் நிறைந்ததாக காணப்படுகின்ற நிலையில், ட்ரம்ப்பின் மீது மாத்திரம் குற்றம் கூறுவதில் பயனில்லை.
உலக நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டுதல். அதற்கு தடையாக இருக்கிகின்ற நாடுகளின் ஆட்சி தலைவர்களை பதவியிலிருந்து அகற்றுதல், அது முடியாவிட்டால், கடத்துதல், அல்லது கொலை செய்தல் மற்றும் மக்களினால் சவால் உள்ள நாடுகளில் படைகளை நிலை நிறுத்துதல். இதுதான் அமெரிக்கா காலாதிகாலமாக கடைப்பிடித்து வருகின்ற கொள்கையாகும்.
அமெரிக்கா சில சதி வேலைகளை நேரடியாகவும், சிலவற்றை தனது வளர்ப்பு பிராணியான இஸ்ரேல் மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் கொள்கைகளை விளங்கிக்கொள்ளாமல் அதன் இன்றைய ஜனாதிபதி ட்ரம்ப் மீது மாத்திரம் விரல் நீட்டுவதில் பயனில்லை.
இன்று ட்ரம்ப் இருப்பதுபோன்று வேறு எவர் ஜனாதிபதியாக இருந்தாலும் இதுதான் நடக்கும். அமெரிக்க இயந்திரத்தின் பின்னணி செயற்பாட்டாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது மாத்திரமே ஜனாதிபதியின் கடமையாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments