முஸ்லிம் எம்.பிக்களில் முதலிடம் பெற்றார் நிசாம் காரியப்பர்.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
2026 ஆம் ஆண்டு ஜனவரியில் manthri.lk வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசைப் பட்டியலில், பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களிடையே முதல் இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்.
இரண்டாம் இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அவர்களும், மூன்றாம் இடத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களும் பெற்றுள்ளனர்.
இந்த தரவரிசை, 2024 நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு இயலுமையை அடிப்படையாகக் கொண்ட தர வரிசைப் பட்டியலை manthri.lk ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments