பாணந்துறையைச் சேர்ந்த கவிதாயினி மஸாஹிரா கனி எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா புத்தளத்தில்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
பாணந்துறையைச் சேர்ந்த மஸாஹிரா கனி எழுதிய இரு நூல்களான விடத்தல் தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலிம் வரலாறு மற்றும் வேரெழுது கவிதை தொகுப்பு ஆகியவற்றின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (25) காலை 10 மணிக்கு புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற உள்ளது
இந்திய வளரி பன்னாட்டு பெண்கள் பேரமைப்பின் இலங்கை வடமேல் மாகாணத்திற்கான தலைவி கவிதாயினி குத்ஷியா இம்தியாஸ் தலைமையில் இடம்பெறும் இவ் விழாவின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் கலந்து சிறப்பிக்கின்றார்.



No comments