புத்தளம் கல்வி வலயம் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் - என் டி எம் தாஹிர் எம் பி பாராளுமன்றில் கோரிக்கை.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் கல்வி வலயத்தைப் பிரிப்பதற்கான கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளதாகவும் இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கல்வி வலயத்தின் நிர்வாகம் சீராகுவதுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகக் கல்வி அதிகாரிகளும், தற்போதைய கல்வி அமைச்சரும் தொடர்சியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், புதிய கல்வி சீர் திருத்தம் என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும்
எனினும் தற்போது பேசும் பொருளாக உள்ள தரம் 06இன் ஆங்கிலப் பாட மொடியுளில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு, மாணவர்களை எதிர்கால யுகத்திற்கு ஏற்ற வகையிலும், புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க கூடிய வகையிலும் புதிய கல்வி சீர் திருத்தம் அமைய வேண்டும் எனவும் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் என் டி எம் தாஹிர் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments