விடுதலை புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி கேள்வி எழுப்பியது யார் ?
10.04.2002 இல் கிளிநொச்சியின் வட்டக்கச்சியில் நடைபெற்ற விடுதலை புலிகளின் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னூறுக்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.
அம்மகாநாட்டில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஐந்து பேர் LTTE தலைவர் பிரபாகரன் முன்பாக கேள்வி எழுப்பினார்கள்.
அதில் சூரியன் FM சார்பாக ARV லோசனும், பின்பு யூ.எல். யாக்கூப், என்.எம். அமீன் ஆகியோர்களும் கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் இன்னும் இரண்டு நபர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள். அவர்களது விபரம் சரியாக தெரியவில்லை.
ரூபவாஹினி சார்பாக யூ.எல். யாக்கூப் அவர்கள் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேநேரம், என்.எம். அமீன் அவர்கள் மூன்று கேள்விகள் கேட்டிருந்தார். அதில் ஒன்றுதான் சமாதான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களுக்கு தனித்தரப்பு பற்றிய கேள்வியாகும்.
ஆமீன் அவர்களின் கேள்விக்கு பிரபாகரன் நேரடியாக பதில் வழங்கியிருந்தார்.
யாக்கூப் கேள்வி கேட்டார் என்பதற்காக, அமீன் கேள்வி கேட்கவில்லை என்று கூறுவது தவறு.
அவ்வாறு இருக்கும்போது, ரவுப் ஹக்கீமை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எமது இளைய தலைமுறையினர்களுக்கு நாங்கள் பொய்யான வரலாற்றுத் தகவல்களை பரப்பக்கூடாது.
இதுபற்றிய ஆதாரபூர்வமான காணொளியினை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments