தமிழகம் கடந்து மக்களுக்காக பணியாற்ற லெஜெண்ட் சரவணன் இலங்கையில் முதலாவது ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தார்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
தமிழகத்தின் வணிக உலகில் இருந்து சினிமா திரையுலகிற்கு அடியெடுத்து வைத்த லெஜெண்ட் சரவணன். எழ்மையின் பின்னணியிலிருந்து தொடங்கி, கடின உழைப்பின் மூலம் மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்ற அடையாளத்துடன், நடிகராகவும் தனித்துவமான பயணத்தை மேற்கொண்டவர்
இவர்.வணிகத்தின் மூலம் மக்கள் நலனில் அதிக ஆர்வம் கொண்ட லெஜெண்ட் சரவணன் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளங்கையில் இருக்கும் நிலையில் அவரது பரந்து பட்ட சமூக சிந்தணை எமது மக்கள் என்ற உயர்ந்த உள்ளத்தின் தன்மையினை எடுத்து காட்டியுள்ளது.
அண்மையில் இலங்கை வாழ் மக்களுக்காக லெஜெண்ட சரவணன் ரசிகர்மன்றம் உருவாக்கப்பட்டமையாகும் அகில உலக லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்றத்தின் தலைவர் டி. முத்துதுரையின் ஆனைக்கிணங்க அகில உலக மகளிரணி தலைவி Dr. கலைவாணி., (MBA., B.Sc., DCCT,) தலைமை செயலாளர் Dr. ஐ. டேவிட் (MBA., B. E., L. L. B)., மருத்துவரணி துணை தலைவர் ஜே. ராஜேஷ், மற்றும் கவிஞ்சர் ரித்து சூர்ய ஆகியோர் இலங்கை்கு விஜயம் செய்து இந்த ரசிகர்மன்றத்தினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுக்கும் தலா ஒவ்வொரு இணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், 22 மாவட்டங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மாவட்ட இணைப்பாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன் மூலம் இலங்கை வாழ் மக்களுக்கு இந்த ரசிகர் மன்றத்தின் மூலம் பல்வேறு நல் நோக்க செயற்பாடுகளை கொண்டுவரும் ஒன்றாக அமையும் என்பது எமது எதிர்ப்பார்ப்பு .
லெஜெண்ட சரவணன் இலங்கை மக்கள் மீது கொண்டுள்ள அன்பும்,மறியாதையும் வெகுவாக அதிகரித்து காணப்படுவதை அவரது இந்த செயற்பாட்டின் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது
தமிழகத்தின் சரவண ஸ்டோர்ஸ் குழுமத்தின் நிறுவுனர் என்ற வகையில், லெஜெண்ட் சரவணன் தமிழக மக்களின் இல்லங்களுக்குப் பரிச்சயமான பெயராக மாறினார்.“மக்கள் அனைவருக்கும் தரமான பொருட்களை நியாய விலையில் வழங்க வேண்டும்” என்ற நோக்கத்துடன் தொடங்கிய அவரது வணிக முயற்சி, இன்று பல கிளைகள் கொண்ட பெரும் வர்த்தக விருட்சமாக வளர்ந்துள்ளது.
தங்கம், துணி, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் சரவண ஸ்டோர்ஸ் ஒரு நம்பிக்கைக்குரிய பிரபலமாக திகழ்கிறது. வணிகத்தில் உச்சத்தைத் தொட்ட பின்னரும், சினிமா மீது கொண்ட கனவை கைவிடாதவர் லெஜெண்ட் சரவணன்.
அந்த கனவின் வெளிப்பாடாக 2022 ஆம் ஆண்டு வெளியான “The Legend” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ஒரு பெரிய வணிகவாதி தனது கனவை நனவாக்கிய முயற்சியாக இத்திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.திரைப்படங்கள் வெறும் வருமானத்திற்கு என்ற ரசிகர்களின் பார்வையில் இருந்து சரவணனை வேறுபடுத்திகாட்டியுள்ளது என்பது உண்யைமாகும்.
லெஜெண்ட் சரவணனின் பயணம் என்பது கருத்தாளம் கொண்டதாகவே காணப்பட்டது, “கனவுகள் வயதைப் பார்க்காது” என்பதை உணர்த்தும் எடுத்துக்காட்டாக பலருக்கும் ஊக்கமாக சரவணின் இந்த பிரவேசம் உள்ளது.
பல விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் இருந்த போதும், தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் முன்னேறுவது அவரது தனித்துவமான குணமாக பார்க்க முடிந்தது.
வணிகம், பொது வாழ்க்கை, சினிமா என பல துறைகளில் தன்னுடைய அடையாளத்தை உருவாக்க முயலும் லெஜெண்ட் சரவணன், கனவுகளுக்காக போராடும் சாதாரண மனிதர்களின் பிரதிநிதியாக பார்க்கப்படுகிறார். அவரது பயணம் வெற்றியின் அளவுகோலை விட, முயற்சியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு கதையாகவே அமைந்துள்ளது.
வணிகத்தில் உச்ச வெற்றியை அடைந்தார் என்பதை கடந்து நேரடியாக 10 ஆயரத்திற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களுக்கும், இதனை நம்பிய சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இதன் மூலம் உயர்ந்த வசதிகளை செய்யும் ஒருவராக சரவணன் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.
தமிழக வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து உலக தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டலை செய்ய வேண்டும் என்ற உதிர்ப்பும் சினிமா மீதான தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்தது.
இதனால் அவர் திரைப்படத் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஈடுபட முடிவு செய்தார். இதன் விளைவாக, தனது சொந்த தயாரிப்பில் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
முதல் திரைப்படம் – The Legend (2022) The Legend திரைப்படத்தின் மூலம் லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வணிகவாதி – சமூக அக்கறையுள்ள ஹீரோ என்ற பிம்பத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மருத்துவம், கல்வி, சமூக சேவை போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய கதைக்களம் அமைந்திருந்தது. இந்த திரைப்படம் தொடர்பில் எதிர் மறயான கருத்துக்களை விமர்சனங்களாக முன் வைக்கப்பட்ட போதும் , ஒரு வணிகவாதி தனக்கான கனவை திரையில் வெளிப்படுத்திய துணிச்சலான முயற்சி என்ற வகையில் இது பேசப்பட்டது.
விமர்சனங்கள் மூலம் லெஜெணண்ட் சரவணன் தமது திரையுலகிற்கு பூட்டு போட்டுவிடுவாரா என்ற கேள்விகள் கனைகளாக தொடுக்கப்பட்ட போதும்,அமைதியானதும்,அவசரமின்மையும் அவரது இயல்பான குணத்தின் பிரதிபலிப்பாக அவரது அடுத்த திரைப்படம் வெளிவரவுள்ளது.
லெஜெண்ட் சரவணனின் திரையுலகப் பயணம், வெற்றி–விமர்சனம் இரண்டையும் தாண்டி கனவுகளுக்காக தைரியமாக முன்னேறும் மன உறுதியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
அவரது முதல் திரைப்படமே பெரிய விவாதங்களை உருவாக்கியது என்பதே, அவர் திரையுலகில் ஏற்படுத்திய தாக்கத்தின் சான்றாகும்.
எது எவ்வாறாக இருந்தாலும் தன்னை போல் தமது மக்களும் வாழ வேண்டும் என்ற எண்ணமானது அவரது வெற்றிக்கு வழியாகும் என்பது யதார்த்தமாகும்.




No comments