புத்தளம் லிவர்பூல் விளையாட்டு கழகத்தின் நிறைவேற்று குழுவினர்களுக்கான புதிய (ஜேசி) மேலங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரில் தொடரான வெற்றிகளை பதிவு செய்து முன்னணி கழகமாக திகழ்கின்ற புத்தளம் லிவர்பூல் விளையாட்டு கழகத்தின் நிறைவேற்று குழுவினர்களுக்கான (ஜேசி) மேலங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (22) இரவு புத்தளம் கடற்கரை வீதி ஸ்டார் மீனவர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
லிவர்பூல் கழகத்தின் தலைவரும், அதன் முன்னாள் வீரருமான எம்.ஐ.எம்.மூஸீன் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
லிவர்பூல் கழகத்தின் உப தலைவரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான ரனீஸ் பதூர்தீன் கழக நிர்வாக உறுப்பினர்களுக்கான இந்த மேலங்கி தொகுதியினை அன்பளிப்பு செய்திருந்தார்.
இதேவேளை லிவர்பூல் அணியின் வீரர்களுக்காக புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் மத்தியஸ்த்தர் சங்கத்தின் தலைவரும், காற்பந்தாட்ட நடுவருமான ஏ.எம்.பஸ்ரின் புதிய மேலங்கி தொகுதி ஒன்றினையும் அன்பளிப்பு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில், 17 வயதுக்குட்பட்ட காற்பந்தாட்ட தேசிய அணியின் பயிற்சி முகாமுக்கு தெரிவு செய்யப்பட்ட லிவர்பூல் கழகத்தின் இரண்டு வீரர்களான யூ.ஐ.எம்.இர்பான், எம்.ஐ.எம். பஸீரத் ஆகியோர் புத்தளம் லீக்கின் மற்றும் லிவர்பூல் கழகத்தின் விருதுகள் வழங்கி இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்விலே லிவர்பூல் கழகத்தின் உப தலைவரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான ரனீஸ் பதூர்தீன், லிவர்பூல் கழகத்தின் உப தலைவரும், புத்தளம் பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான ஏ.ஆர்.எம்.நில்பான் உள்ளிட்ட லிவர்பூல் கழக நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் வீரர்களும் கலந்து கொண்டனர்.













No comments