புத்தளம் மாநகர சபை விடுக்கும் விசேட அறிவித்தல்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டட நிர்மாணங்களில் ஈடுபடும் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவருக்குமான முக்கிய அறிவித்தல் ஒன்றினை மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் விடுத்துள்ளார்.
வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்களை புதியதாக நிர்மாணிக்கும் போது அல்லது திருத்தம், விரிவாக்கம் செய்யும் போது கீழ்கண்ட விடயங்களை அவதானித்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுப்பாதைகளில் சீமெந்து கலவை அல்லது தயார் செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
நிர்மாணப் பணிக்காக மண், கற்கள் போன்றவற்றை பொதுப்பாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக குவிப்பது குற்றமாகும்.
இதனை மீறும் பட்சத்தில், அவை புத்தளம் மாநகர சபையால் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.
புத்தளம் நகரின் ஒழுங்கையும் அழகையும் பாதுகாப்பதற்காக மாநகர சபையின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments