JobVibe.lk - Sri Lanka Job Portal

காத்தான்குடி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நேரில் பார்வையிட்டார் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சிபாரிசின் பேரில், IROAD வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நேரில் சென்று நேற்று (27) பார்வையிட்டார்.


இதன்போது, அல் அக்ஸா பள்ளிவாயல் வீதி மற்றும் பதுரியா பிரதேசத்தில் இடம்பெற்று வரும் வடிகாண் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்ததுடன் இதனைத் தொடர்ந்து, குறித்த வேலைத்திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டார்.


இந்த கலந்துரையாடலின் போது, பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவுறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குறித்த திட்டத்திற்கான மீதமுள்ள நிதி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


-- ஊடகப்பிரிவு







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال