புத்தளத்தில் இடம்பெற்ற பாணந்துறை கவிதாயினி மஸாஹிரா கனி எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
பாணந்துறையைச் சேர்ந்த மஸாஹிரா கனி எழுதிய இரு நூல்களான விடத்தல் தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலீம் அவர்களின் வரலாறு மற்றும் வேரெழுது கவிதை தொகுப்பு ஆகியவற்றின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (25) புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்திய வளரி பன்னாட்டு பெண்கள் பேரமைப்பின் இலங்கை வடமேல் மாகாணத்திற்கான தலைவி கவிதாயினி குத்ஷியா இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் கலந்து சிறப்பித்துடன் நூலாசிரியரினால் முதல் பிரதியும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
சிறப்பு அதிதிகளாக முன்னாள் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம் ஏ.எம்.எம் ஜவாத் மரைக்கார், இஸட் ஏ. சன்ஹிர், புத்தளம் , மஹகும்பகடவல பிரதேச செயலாளர் எம் எஸ் அஹமட் அலா ,பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஊர் பிரமுகர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ் இரு நூல்களின் அறிமுக விழாவின் தலைமையுரை இந்திய வளரி பன்னாட்டு பெண்கள் பேரமைப்பின் இலங்கை வடமேல் மாகாணத்தின் தலைவி கவிதாயினி குத்ஷியா இம்தியாஸ் நிகழ்த்தியதுடன் வரவேற்புரையை முஹைஸ் கனிபும் ஆசிவுரையை புத்தளம் கல்விப் பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர் திருமதி விஜயலட்சுமி நிகழ்த்தினர்.
தொடர்ந்து நூலாசிரியர் கவிதாயினி மஸாஹிரா கனி பற்றிய வாழ்த்து கவிகளை புத்தளம் கவிஞர் எஸ் ஏ.சீ.பீ மரைக்கார், வவுனியா சுடரி அமைப்பினதும் வளரி பன்னாட்டு பெண்கள் பேரமைப்பின் இலங்கை தலைவியுமான கவிதாயினி சிவ கௌரி, கொழும்பு வலம்புரி கவிதா வட்டத்தின் அதிபர் கவிஞர் ராஜன் நசுறுதீன் ஆகியோர் நிகழ்த்தினர்.
முன்னாள் ஆசிரியர் எம் எம் அஸீஸின் அனுபவ பகீர்வு இடம்பெற்றதுடன் வேரெழுது கவிதை தொகுப்பின் நயவுரை முன்னாள் புத்தளம் வலயத்தின் கல்விப் பணிப்பாளர் இஷட் ஏ சன்ஹீராலும் விடத்தல்தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலீம் வரலாற்று நூலின் நயவுரை முன்னாள் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் எம் ஏ எம் எம் ஜவாத் மரைக்காரினாலும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வின் விஷேட அம்சமாக வவுனியா சுடரி அமைப்பினதும் வளரி பன்னாட்டு பெண்கள் பேரமைப்பின் இலங்கை தலைவியுமான கவிதாயினி சிவ கௌரியினால் நூலாசிரியர் கவிதாயினி மஸாஹிரா கனி நினைவுச்சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்டமையும் குறிப்பிடத்தக்கது.









No comments