Breaking News

மீண்டும் ஈரான் மீது இரானுவ நடவடிக்கக்கான ஆயத்தமா?

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தென்மேற்கு, மாலைதீவுக்கு தெற்கே அமைந்துள்ளதுதான் Diego Garcia தீவாகும். இதனை அமெரிக்காவும் பிரிட்டணும் இணைந்து அவர்களது விமானத் தளமாக பயன்படுத்தி வருகின்றது.


அங்கு அமெரிக்க விமானப்படையின் C-17 Globemaster III என்னும் கனரக சரக்கு விமானங்கள் இன்று நான்கு தடவைகள் இந்த தீவுக்கு வந்து சென்றுள்ளாதாக செய்திகள் கூறுகின்றன.


இஸ்ரேலுடனான ஈரானின் பண்ணிரெண்டு நாள் போரின்போது அமெரிக்காவின் B-2, B-52 ஆகிய குண்டு வீச்சு விமானங்கள் ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த தீவில்தான் தளம் அமைத்திருந்தது. 


எனவேதான் அரபு நாடுகள் தங்களது வான்பரப்பை பயன்படுத்த தடை விதித்ததன் காரணமாக ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்திவிட்டு மீண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது.


தென் சீனக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் USS Abraham Lincon என்னும் விமானம் தாங்கிக் கப்பல் மத்தியகிழக்கு பகுதிக்கு அழைக்கப்பட்டது பற்றி நேற்று பதிவிட்டிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. 


முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது




No comments