இலவச கல்வியை பாதுகாப்பதற்கான தேசிய கலந்துரையாடல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் என். டீ. எம். தாஹிர் பங்கேற்பு.
தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களில் எழுந்துள்ள பிரச்சினைக்குரிய நிலைமை தொடர்பில் ஆராய்ந்து சரியான கல்விச் சீர்திருத்தங்களை வகுக்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான தேசிய கலந்துரையாடல் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில், கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரையும் அழைத்து, இந்த விடயத்தில் அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் என். டீ. எம். தாஹிர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். டீ. எம். தாஹிர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments