இரத்ததானநிகழ்வு வெற்றிகரமாக நிறைவு
(நூர்தீன் பெளசர்)
Lanka Tamil FM/TV வானொலியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு, இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியத்துடன் இணைந்து இன்று பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னைய நாள் தவிசாளருமான கெளரவ எம்.எஸ். அப்துல் வாசித் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
விசேட அதிதியாக பொத்துவில் பிரதேச சுகாதார காரியாலய சுகாதார அதிகாரி Dr. உவைஸ் பாறுக் அவர்கள் கலந்து கொண்டார்.
பொலிஸ் பிரிவினர், சமூக அமைப்புகள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினர்.
இரத்ததானம் வழங்கியவர்களுக்கு Lanka Tamil வானொலியினால் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த உதவிய அனைத்து அமைப்புகள், அனுசரணையாளர்கள் மற்றும் இரத்ததானம் வழங்கிய தானதாரர்களுக்கு தங்களது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.














No comments