Breaking News

புத்தளம் நல்லாந்தழுவை மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்மாதிரியான செயற்பாடு

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

இந்தியா கேரளா மாணிலத்தில் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கடையாமோட்டை பாஹிம் முஹம்மது பர்ஷாதை கௌரவிக்கும் முகமாக புத்தளம் நல்லாநதழுவை ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகள் அவருக்கு  பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது.


மேற்படி நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (02) ஜூம்ஆ தொழுகையை அடுத்து பள்ளிவாசலில் இடம்பெற்றதுடன் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் பரஷாதின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இவ்வாறான ஊருக்கு முன்மாதிரியான  கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்த நல்லாந்தழுவை மொஹிதீன் ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு ஜமாத்தார்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

























No comments