கொய்யாவாடி அரபா நகரில் புதிய தாய் சேய் நிலையம் திறப்பு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
நுரைச்சோலை கொய்யாவாடி அரபா நகர் கிராமத்தில் புதிய தாய் சேய் பராமரிப்பு நிலையம் திங்கட்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது.
இத் திறப்பு விழாவின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார்.கௌரவ அதிதியாக கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ் கலந்து கொண்டிருந்ததோடு, சிறப்பு அதிதியாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.முஸம்மில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




No comments