இலங்கை - இந்தியா வக்ப் மற்றும் கல்வி விவகாரங்கள் குறித்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் எஸ்.கே. நவாஸ் கலந்துரையாடல்.!
இந்தியா தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் உறுப்பினரும், தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் உதவிச் செயலாளருமான சட்டத்தரணி எஸ்.கே. நவாஸ் அவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (5) கொழும்பு கிரான்பெல் ஹோட்டலில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்திய வக்ப் விவகாரங்கள், உயர் கல்வி தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், இலங்கை மக்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வழங்கிவரும் சேவைகளைப் பாராட்டி, சட்டத்தரணி எஸ்.கே. நவாஸ் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
-- ஊடகப்பிரிவு

No comments