புத்தளம் சமகி மாவத்தை வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ஆசிரியர் சிபாகின் முன்மொழிவின் பேரிலும், மாநகர முதல்வர் ரின்ஷாட் அஹமடின் வேண்டுகோளின் பேரிலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ரூ . 3.6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் புத்தளம் சமகி மாவத்தை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா புதன்கிழமை (14) பிற்பகல் 5.00 மணிக்கு சமகி மாவத்தை வீதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளருமான கயான் ஜனக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல், மாநகர சபை முதல்வர் ரின்ஷாட் அஹமட் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த வீதி அபிவிருத்தித் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், பிரதேசத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.




No comments