JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கோழிதிஸ்ஸ மாவத்தை வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் மாநகர சபை உறுப்பினர்  சசிக விஜயசூரியவின் முன்மொழிவின் பேரிலும், மாநகர முதல்வர் ரின்ஷாட் அஹமடின் வேண்டுகோளின் பேரிலும்,  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ரூ . 1 கோடி  பெறுமதியான நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் கோழிதிஸ்ஸ மாவத்தை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா புதன்கிழமை (14) பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்றது.


இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளருமான கயான் ஜனக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல், மாநகர சபை முதல்வர் ரின்ஷாட் அஹமட் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள்,  வீதி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال