Breaking News

ஆதம்பாவா எம்.பி ஊரின் நிம்மதியை சீர் குலைக்காமல் இருங்கள் - வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

பாறுக் ஷிஹான்

ஆதம்பாவா எம்.பி அவர்கள் இந்த ஊரின் நிம்மதியை சீர் குலைக்காமல் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபை விடயங்களில் தலையிடாமல் இருக்குமாறு வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான  யு.எல் றிஸ்வி  கேட்டுக் கொண்டுள்ளார்.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தற்காலிகமாக இடம்பெற்றுள்ள இடைக்கால நிர்வாக சபை சம்பந்தமாக விசேட ஊடாக சந்திப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை (20) சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில்  இரவு நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்


சாய்ந்தமருது ஊர் அமைதியான ஊர் ஆகும்.கொள்கை ரீதியாக எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல்  இயங்குகின்ற ஒரு ஊர் இதுவாகும்.தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஆதம்பாவா அவர்கள் அவரது கட்சி ரீதியாகவும் அவரது கொள்கை ரீதியாகவும் அதிகளவான ஆட்களை இணைத்து பள்ளிவாசல் இடைக்கால நிர்வாகத்தில் அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டார்.


இதனால் இடைநடுவில் கருத்து முரண்பாடுகள் எழுந்து தலைமைத்துவங்கள் மாறி தற்போதுள்ள தலைமைத்துவம் சரியாக கொண்டு செல்கின்றது.அத்துடன் பின்னர் வந்த இடைக்கால நிர்வாக சபையிலும் 4 பிரஜா சக்தி உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.ஆனால் இந்த பள்ளிவாசலுக்கு கொள்கை ரீதியாக ஆட்களை இணைத்து கொள்வதாக ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.


ஏனெனில் இப்பள்ளிவாசலில் ஏற்கனவே இருந்தவர்கள் ஒரு நிலைப்பாட்டில் ஒரு கொள்கையில் இருந்தவர்கள் ஆவர்.இது ஒரு தாய் பள்ளிவாசல்.தற்போது ஒரு கட்சியை சேர்ந்தவர்களே அதிகமாக இடைக்கால சபை பெயர்ப்பட்டியலில் காண முடிகின்றது.இவ்வாறான நிலைமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.எனவே ஆதம்பாவா எம்.பி அவர்கள் இந்த ஊரின் நிம்மதியை சீர் குலைக்காமல் இந்த பள்ளிவாசல் விடயங்களில் தலையிடாமல் இருக்குமாறு இந்த ஊர் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.


இச்செய்தியாளர் சந்திப்பில் வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம் அஸீம் ,  வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் செயலாளர் ஏ.எம்.றம்சான் ஆகியொரும் உடனிருந்தனர்.




No comments