புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு.
(உடப்பு நிருபர்-க.மகாதேவன்)
ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யும் நிகழ்வு இன்று (21) காலை 8.30 மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு.ந.பத்மானந்தன் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களால் இசைக்கருவிகள் சகிதம் இந்த புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். இதன் போது அண்மையிலுள்ள ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்ப பாடசாலை மாணவர்கள், பூனப்பிட்டி றோ .கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற பாட இணைப்பாளர் திரு.வி. அருணாகரன்,பூனப்பிட்டி றோ.கத்தோலிக்க பாடசாலை அதிபர் திரு.க.சிவானந்தகுமாரன்,மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.










No comments