Breaking News

கற்பிட்டியின் 50 வயதிற்கு மேற்பட்ட கரப்பந்தாட்ட அணி இரண்டாம் இடத்தை பெற்றது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

அகில இலங்கை ரீதியில் நிக்கவெரட்டி கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் பகல் இரவு போட்டியாக சனிக்கிழமை (24) இடம்பெற்றது


 அகில இலங்கை ரீதியில் 11 மாவட்டங்களில் இருந்து 11 கரப்பந்தாட்ட அணிகள் பலப்பரிட்சை நடத்தியதில் இறுதிப் போட்டிக்கு கற்பிட்டி கரப்பந்தாட்ட அணியும் நிகவெரட்டி கரப்பந்தாட்ட அணியும் தெரிவு செய்யப்பட்டன.


மிகவும் சுவாரஸ்யமாக இடம்பெற்ற இவ் இறுதி போட்டியில் நிகவெரட்டி கரப்பந்தாட்ட அணி வெற்றி பெற்றதுடன் கற்பிட்டி கரப்பந்தாட்ட அணி இரண்டாம் இடத்தை பெற்றது 


இரண்டாம் இடத்தை பெற்ற 50 வயதிற்கு மேற்பட்ட கற்பிட்டி கரப்பந்தாட்ட அணிக்கு கற்பிட்டி மக்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments