JobVibe.lk - Sri Lanka Job Portal

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI SULTAN ISKANDAR MUDA - 367' இலங்கையிலிருந்து புறப்பட்டது

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக 2026 ஜனவரி 22 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படை போர்க்கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA - 367’, 2026 ஜனவரி 23 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.


இந்த விஜயத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரியாக, கமாண்டர் Annugerah Anurullah, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் ஜகத் குமாரவுடன் கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டதுடன், மேலும், குறித்த கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கொழும்புப் பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிடும் பயணத்திலும் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال