JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் (12) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.கே. நயீமுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமேல் மாகாண கல்விப்பணிப்பாளர் ஜே.ஏ.எம்.பி.ஜயதிலக பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

“திறமைக்கும் சாதனைக்கும் கௌரவமளித்தல்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊரின் நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கல்வி, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த திறமைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி அடைவுகளைப் பாராட்டுவதுடன், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் நோக்கில் இப்பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்குவதில் பாடசாலைச் சமூகத்தின் அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வருடாந்த பரிசளிப்பு விழா, மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال