(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான இலங்கை பெண் கிளப் (Sri Lanka Pen Club) இன் ஆறாவது தேசிய மாநாடு (17) சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
"ஆரோக்கியமான குடும்பம்; ஆற்றலுள்ள பெண்ணின் ஆதாரம்" என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் இலக்கிய வித்தகர், கலாபூஷணம் சம்மாந்துறை மஷூறா (ஜே.பி) தலைமையில் இடம்பெற்றது
இந் நிகழ்வின் அதிதிகளாக பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாண பணிப்பாளர் மேனகா புவிக்குமார் ,கவிஞர் றவூப் ஹஸீர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.என். மைமூனா, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், டொக்டர் பர்வீன் அப்துல் காதர், நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் Sri Lanka pen club இல் எழுத்தாளராகவும் நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியமைக்காக கற்பிட்டி பிரதேசத்தின் ஏத்தாளையைச் சேர்ந்த அகீலா ஜௌபர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




