எம்.யூ.எம்.சனூன்
தித்வா பேரழிவின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் பல்லம பிரதேச செயலகப் பிரிவில், முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்த வீடுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் இழப்பீட்டுக் காசோலைகளை விநியோகிக்கும் சிறப்பு நிகழ்வு அண்மையில் (18) இடம்பெற்றது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இழப்பீட்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.
கடந்த ஆண்டில் பொது வரிப் பணத்தை முறையாக நிர்வகித்ததன் காரணமாக அரசாங்கத்தால் திறைசேரியில் பணத்தைச் சேமிக்க முடிந்தது என்றும், நாட்டில் பிற அபிவிருத்தித் திட்டங்களையோ அல்லது பொதுத்துறையில் சம்பள உயர்வுகளையோ நிறுத்தாமல், சேமிக்கப்பட்ட பணத்திலிருந்து பேரழிவு நிவாரணப் பணிகளுக்கு பெரும் தொகையை ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் அங்கு உரையாற்றும்போது சுட்டிக்காட்டினார்.
ஆனமடுவை பிரதேச சபையின் தலைவர் ஆலோக பண்டார, பிரதித் தலைவர் இமல்க தில்ஷான், பல்லம பிரதேச செயலாளர் டி.ஏ. குமுதினி சந்திரிகா, பல்லம பொலிஸ் பொறுப்பதிகாரி, மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


